முகப்பு
தற்போதைய செய்திகள்

உத்தரகண்ட் மாநில பா.ஜ.க. தலைவருக்கு கரோனா உறுதி

உத்தரகண்ட் மாநில பா.ஜ.க. தலைவர் பன்சிதர் பகத்திற்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:13 PM
உத்தரகண்ட் மாநில பா.ஜ.க. தலைவர் பன்சிதர் பகத்
பகிர்:

உத்தரகண்ட் மாநில பா.ஜ.க. தலைவர் பன்சிதர் பகத்திற்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பன்சிதர் பகத் கூறுகையில், கடந்த வெள்ளிக்கிழமை செய்த கரோனா பரிசோதனையின் முடிவில், எனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

கடந்த ஒரு வாரமாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தயவு செய்து பரிசோதனை செய்து பாருங்கள். உங்கள் அனைவரது ஆசிர்வாதத்தால் விரைவில் திரும்பி வருவேன் என கூறினார். 

முன்பே, உத்தரகண்ட் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் சத்பால் மகாராஜ், அவரது மனைவி அமிர்தா ராவத் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் உள்பட 21 பேரும் கடந்த மாதம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.