முகப்பு
தற்போதைய செய்திகள்

சபரிமலைக்கு கூடுதல் பக்தர்கள்: கேரள அரசு ஒப்புதல்

சபரிமலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை      அதிகரிக்க கேரள அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Updated On : 1 டிசம்பர், 2020 at 7:22 PM
சபரிமலை
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:30 PM

சபரிமலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை  அதிகரிக்க கேரள அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல-மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய 3 மாதங்கள் திறக்கப்படும். இந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

நிகழ்வாண்டு கரோனா பரவல் காரணமாக சபரிமலைக்கு தினசரி 1,000 பக்தா்களுக்கும், சனி, ஞாயிறுகளில் 2,000 பக்தா்களுக்கும் மட்டுமே வழிபாடு செய்ய அனுமதி அளித்து வந்தது.

Advertisement

இந்நிலையில் பல்வேறு தரப்பில் இருந்தும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. 

இதனையடுத்து, தினசரி 2,000 பக்தர்களுக்கும், சனி, ஞாயிறுகளில் 4,000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற தேவசம் போர்டு அளித்த பரிந்துரைக்கு கேரள அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், டிசம்பர் 2ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் பதிவு செய்து பக்தர்கள் தரிசனத்திற்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.