கர்நாடகத்தில் கரோனா 2-ம் அலைக்கு வாய்ப்பு: மருத்துவக் குழு
கர்நாடக மாநிலத்தில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் வருகின்ற ஜனவரி மாதம் ஏற்படக்கூடும் என மாநில மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் வருகின்ற ஜனவரி மாதம் ஏற்படக்கூடும் என மாநில மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
கரோனா நோய்த்தொற்று கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பரவி வருகின்றது. கர்நாடகத்தில் கரோனா முதலாம் அலையை தற்போது அம்மாநில அரசு கட்டுப்படுத்தியுள்ளது.
இதுவரை கர்நாடத்தில் மொத்தமாக 8,86,227 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 11,792 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், அம்மாநிலத்தில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கமானது வருகின்ற ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் ஏற்படக்கூடும் என மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, பிப்ரவரி மாதம்வரை நாள்தோறும் குறைந்தது 1.25 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.