முகப்பு
தற்போதைய செய்திகள்

சத்தீஸ்கரில் நக்சல் ஒருவர் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நக்சல் ஒருவர் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:02 PM
கோப்புப்படம்
பகிர்:

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நக்சல் ஒருவர் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.

பிஜப்பூர் மாவட்டத்தில் கங்களூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மத்திய ரிசர்வ் காவல் படை, மாவட்ட ரிசர்வ் படை இணைந்து வெள்ளிக்கிழமை நக்சல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஹக்வா கிராமத்திற்கு அருகில் சென்றபோது பாதுகாப்புப் படை வீரர்களை நோக்கி அர்ஜூன் என்ற நக்சல் துப்பாக்கியால் சுட்டுள்ளார், வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.

மேலும் அப்பகுதியில் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் வெடிப் பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →