முகப்பு
தற்போதைய செய்திகள்

மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை(டிச.9) கூடுகிறது

மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை(புதன்கிழமை) காலை கூடுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:04 PM
கோப்புப்படம்
பகிர்:

மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை(புதன்கிழமை) காலை கூடுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் சட்டமாக நிறைவேற்றப்பட்டன.

இந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியாணா மாநில விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியாக வந்து 13 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், விவசாய சங்க நிர்வாகிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் நாளை 5ஆம் கட்டப் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது.

இந்த நிலையில் நாளை காலை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், விவசாயிகளின் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முழு கட்டுரையைப் படிக்க →