கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

கேரள உள்ளாட்சித் தேர்தல்: நாளை(டிச.10) 2-ம் கட்ட வாக்குப்பதிவு

கேரள உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை(டிச.10) நடைபெறவுள்ளது.

ANI

கேரள உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை(டிச.10) நடைபெறவுள்ளது.

கேரள மாநிலம் முழுவதும் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு எர்ணாக்குளம், கோட்டயம், திருச்சூர், பாலக்காடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் நாளை(வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலுக்கான வாக்கு இயந்திரங்கள் கொச்சியில் இருந்து 3,132 வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இதுகுறித்து பேசிய எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியல் எஸ்.சுஹாஸ் கூறியதாவது,

கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக தேர்தல் நடைபெறும் எனக் கூறினார்.

இதற்கு முன் முதற்கட்டமாக இடுக்கி, கொல்லம், பதானம்திட்டா, திருவனந்தபுரம் மற்றும் ஆலப்புழா ஆகிய 5 மாவட்டங்களுக்கு நடைபெற்ற முதற்கட்டத் தேர்தலில் 75 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

மேலும் இரண்டாம் கட்டத் தேர்தல் டிசம்பர் 10 ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தல் டிசம்பர் 14 ஆம் தேதியும் நடக்கவுள்ளது. 

இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனமழையால் பாதிக்கப்பட்ட கர்நாடகம்: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

மூப்பனார் நினைவுநாள்: தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மரியாதை!

ஜி.கே.மூப்பனார் புகழஞ்சலி நிகழ்ச்சி! தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக?

யூனியன் பிரதேசத்திற்கு நிவாரண தொகுப்பு அறிவிக்குமாறு மெஹபூபா வலியுறுத்தல்!

SCROLL FOR NEXT