பிரபல நடன இயக்குநர் ரெமோ டிசோசா மருத்துவமனையில் அனுமதி
பிரபல பாலிவுட் நடன இயக்குநர் ரெமோ டிசோசாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல பாலிவுட் நடன இயக்குநர் ரெமோ டிசோசாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர் ரெமோ டிசோசா(வயது 46). இவர் பாலிவுட் திரைத்துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
மேலும், பல தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவரகவும் இருந்து வருகின்றார்.
இந்நிலையில், மும்பையில் வசித்து வந்த டிசோசாவிற்கு இன்று(வெள்ளிக்கிழமை) பிற்பகல் மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.