முகப்பு
தற்போதைய செய்திகள்

டிச.21-ல் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகம் வருகை

இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் டிசம்பர் 21ஆம் தேதி தமிழகம் வருகின்றனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
தேர்தல் ஆணையம்
பகிர்:

இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் டிசம்பர் 21ஆம் தேதி தமிழகம் வருகின்றனர்.

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ளது. இதையடுத்து தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்வதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக் குழுவினர் டிசம்பர் 21 மற்றும் 22ஆம் தேதிகளில் தமிழகத்திற்கு வருகின்றனர்.

தமிழகம் வரும் உயர்மட்டக் குழுவினர் டிசம்பர் 21ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

அதனையடுத்து, தமிழக தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து டிசம்பர் 22ஆம் தேதி ஆலோசனை செய்யவுள்ளனர்.

மேலும், இந்த வருகையின் போது அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரிடம் கருத்துக்கள் கேட்கவும், மனுக்கள் பெறவும் வாய்ப்பு உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →