முகப்பு
கோப்புப்படம்
தற்போதைய செய்திகள்

கதர் வாரிய கண்காணிப்பாளருக்கு 33 ஆண்டுகள் சிறை: காஞ்சிபுரம் நீதிமன்றம் தீர்ப்பு

கதர் வாரிய கண்காணிப்பாளருக்கு 33 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை அளித்து காஞ்சிபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
கோப்புப்படம்
பகிர்:

கதர் வாரிய கண்காணிப்பாளருக்கு 33 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை அளித்து காஞ்சிபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

வேலூர் மாவட்டம் விஜி ராவ் நகரைச் சேர்ந்தவர் சின்னக்கண்ணு(வயது 65). இவர் காஞ்சிபுரத்தில் கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கண்காணிப்பாளராக பணியாற்றியவர். இவர் பதவியில் இருந்தபோது போலியான கணக்கு எழுதி மோசடி செய்ததாக காஞ்சிபுரம் மாவட்ட வணிக குற்ற புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில் வாரியத்தின் துணைப்பதிவாளர் கடந்த 2006 ஆம் ஆண்டு புகார் செய்தார்.

புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து சின்ன கண்ணுவை கைது செய்திருந்தனர். இவ்வழக்கு காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் சின்ன கண்ணுவை 2018 ஆம் ஆண்டு வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

இந்த நிலையில் அரசு தரப்பில் இவ்வழக்கு மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அரசு தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞரான எஸ்.இளவரசு ஆஜரானார். வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி கயல்விழி சின்னக் கண்ணு மீது நம்பிக்கை மோசடி செய்திருப்பது, ஏமாற்றி இருப்பது, பொய் கணக்கு எழுதி போலியான ஆவணங்கள் தயாரித்தது உள்ளிட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. எனவே சின்ன கண்ணுக்கு 33 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூபாய் 48 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

கடந்த 2006ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு 14 ஆண்டுகளுக்கு பிறகு 2020 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →