கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி அரசு தீர்மானம்

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

DIN

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்த சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலிருந்து ஏராளமான விவசாயிகள் தில்லியில் ஒருங்கிணைந்து மத்திய அரசுக்கு எதிராக 22-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனிடையே ஆம் ஆத்மி கட்சி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்திலும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், தில்லி சட்டப்பேரவையில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர்கள் கிழித்து எரிந்தனர்.

பின், தில்லி சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், போராடும் விவசாயிகளுக்கு முழு ஆதரவைத் தருவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT