தற்போதைய செய்திகள்

கேரளத்தில் 2வது 100 நாள் திட்டம் அறிவிப்பு

ANI

கேரளத்திள் இரண்டாவது 100 நாள் செயல்திட்டம் ரூ. 10,000 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் கரோனா தொற்று பரவலால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குறைப்பதற்கு கடந்த செப்டம்பர் மாதம் கேரளத்தில் 100 நாள் செயல்திட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.

அந்த செயல்திட்டம் முடிவடைந்த நிலையில் ரூ. 10,000 கோடி மதிப்பிலான 2வது 100 நாள் செயல்திட்டத்தை கேரள முதல்வர் அறிமுகப்படுத்தினார்.

இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,

கேரளத்தில் 2வது 100 நாள் செயல்திட்டத்தில் ரூ. 10,000 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். இடது ஜனநாயக முன்னணி அரசு அளித்த 600 வாக்குறுதியில் 570-யை நிறைவேற்றியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை 100 நாள் செயல்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இந்த இரண்டாம் கட்ட 100 நாள் செயல்திட்டத்தில், மாநில பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 9-இல் சங்கர மடத்தில் ஷியாமா சாஸ்திரிகள் ஜெயந்தி: 350 இசைக் கலைஞா்கள் பங்கேற்பு

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

SCROLL FOR NEXT