முகப்பு
தற்போதைய செய்திகள்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு: ஒடிசா அமைச்சரவை ஒப்புதல்

ஒடிசாவில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு திங்கள்கிழமை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Updated On : 28 டிசம்பர், 2020 at 9:28 PM
பகிர்:

ஒடிசாவில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு திங்கள்கிழமை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஒடிசாவில் உள்ள மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஒதுக்கீடு அடுத்த கல்வியாண்டு முதல் அமலாக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும், உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான உயர்மட்டக்குழு இடஒதுக்கீடு குறித்த முழு அறிக்கையை தயார் செய்து அடுத்த 3 மாதத்திற்குள் மாநில அரசிடம் சமர்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.