முகப்பு
தற்போதைய செய்திகள்

கம்பம் நூலகத்திற்கு  ஆர்வலர் விருது

தமிழக அரசின் "சிறந்த நூலக ஆர்வலர் விருது" கம்பம் நூலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 29 டிசம்பர், 2020 at 6:24 PM
தேனி மாவட்ட  கலெக்டர் பல்லவி பல்தேவ் கம்பம் நூலக வாசகர் வட்டத்தலைவர் கவிஞர் பாரதனிடம் விருது வழங்கினார். 
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:44 PM


கம்பம்: தமிழக அரசின் "சிறந்த நூலக ஆர்வலர் விருது" கம்பம் நூலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பொது நூலக இயக்ககம் வளர முனைப்புடன் பங்காற்றி நூலக வளர்ச்சியை மேம்படுத்தி வரும்  சிறந்த வாசகர் வட்டத்திற்கு ஆண்டு தோறும் "சிறந்த நூலக ஆர்வலர் விருது" தமிழக அரசு வழங்கி கௌரவித்து வருகிறது.

அதன்படி இவ்வாண்டு தேனி மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் கம்பம் கிளை நூலக வாசகர் வட்டத்திற்கு சிறந்த நூலக ஆர்வலர் விருது வழங்க்கப்பட்டது. 

Advertisement

தேனி மாவட்ட  கலெக்டர் பல்லவி பல்தேவ் கம்பம் நூலக வாசகர் வட்டத்தலைவர் கவிஞர் பாரதனிடம் விருது வழங்கினார். 

நிகழ்ச்சியின்போது வாசகர் வட்ட செயலாளர் நூலகர் மணிமுருகன், பொருளாளர் இமானுவேல், சோமநாதபாரதி, மாவட்ட நூலக அலுவலர் லெட்சுமண ப்பெருமாள் மற்றும் நூலக அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.