முகப்பு
தற்போதைய செய்திகள்

விவசாயிகளுடன் உணவருந்திய மத்திய அமைச்சர்கள்

தில்லியில் 6-ஆம் கட்டப் பேச்சுவார்த்தையின் போது விவசாயிகளுடன் மத்திய அமைச்சர்கள் மதிய உணவு அருந்தினார்கள்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
விவசாயிகளுடன் உணவு அருந்தும் மத்திய அமைச்சர்கள்
பகிர்:


தில்லியில் 6-ஆம் கட்டப் பேச்சுவார்த்தையின் போது விவசாயிகளுடன் மத்திய அமைச்சர்கள் மதிய உணவு அருந்தினார்கள்.

பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தில்லி எல்லைகளில் 35-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசு ஏற்னகவே 5 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்திய நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு விடுத்த அழைப்பை விவசாயிகள் மறுத்து வந்த நிலையில், தற்போது நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளனர்.

வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் மத்திய அரசுடன் விவசாயிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மதிய உணவின் போது மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் விவசாயிகளுடன் உணவருந்தினார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →