முகப்பு
தற்போதைய செய்திகள்

போலி சான்றிதழ்களுடன் ஆசிரியர் பணியில் சேர்ந்த 11 பேர் மீது வழக்கு: அமைச்சர் ரத்தன் லால் நாத்

திரிபுரா மாநிலத்தில் அரசு பள்ளியில் போலி சான்றிதழ்களுடன் ஆசிரியர் பணியில் சேர்ந்த 11 பேர் மீதும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:50 PM
பகிர்:

அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் அரசு பள்ளியில் போலி சான்றிதழ்களுடன் ஆசிரியர் பணியில் சேர்ந்த 11 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ரத்தன் லால் நாத் தெரிவித்துள்ளார்.

திரிபுரா மாநிலத்தில் பாஜக கூட்டணி அரசு நடத்து வருகிறது. அம்மாநிலத்தில் சமீபத்தில் ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலம் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்ய தகுதி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியராக 425 பேரும், முதுகலை பட்டதாரி ஆசிரியராக 7 பேரும் நியமனம் செய்யப்பட்டனர்.

பின்னர், பணி நியமன உத்தரவு பெற்றவர்களிடம் இருந்து பெறப்பட்ட கல்வி சான்றிதழ்களை அதிகாரிகள் சரிபார்த்தபோது அதிர்ச்சியான தகவல்கள் காத்திருந்தது. பணி நியமனம் பெற்றவர்களில் 11 பேரின் சான்றிதழ்கள் போலியானவை என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஒருவர் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கும், 10 பேர் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆகும். 

Advertisement

இதுகுறித்து மாநில கல்வித்துறை அமைச்சர் ரத்தன்லால் நாத் கூறிகையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 362 பள்ளிகளில் 425 பட்டதாரி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். அதில் 1 ஆசிரியர்  மேற்கு திரிபுரா மாவட்டம் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்தவர். மற்ற 11 பேரின் சான்றிதழ்களை சரிபார்த்தபோது அவைகள் போலியானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கும், 10 பேர் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள். போலி சான்றிதழ்களை வைத்து ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். அரசு வேலைக்கு சேர்பவர்களை ஒளிவுமறைவு இல்லாமல் தேர்வு செய்ய தீர்மானித்து இருக்கிறோம் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments