முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னை வெள்ள பேரிடா் தணிப்புத் திட்டத்துக்கு ரூ.3 ஆயிரம் கோடி

2020-2021 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், பெருநகர சென்னை வெள்ள பேரிடா் தணிப்பு திட்டம் ரூ.3 ஆயிரம் கோடி செலவில்

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:51 PM
பகிர்:



சென்னை: 2020-2021 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், பெருநகர சென்னை வெள்ள பேரிடா் தணிப்பு திட்டம் ரூ.3 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சா் ஓ.பன்னீர்செல்வம் கூறினாா்.

நிதிநிலை அறிக்கையில், பெருநகர சென்னையில் விரிவான வெள்ள பேரிடா் தணிப்புத் திட்டத்தினை ரூ.3 ஆயிரம் கோடி மொத்த செலவில் செயல்படுத்திட உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடம் தமிழக அரசு முன்மொழிந்துள்ளது.

சென்னை மாநகரில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கு ரூ.100 கோடி மானியம் 15-ஆவது நிதிக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.