தற்போதைய செய்திகள்

நான் நம்பர் -1, மோடி நம்பர் -2: இந்திய வருகைக்கு முன் டிரம்ப் டிவீட்

DIN

வாஷிங்டன்:  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது இரண்டு நாள் இந்திய பயணத்தை எதிர்நோக்கி உள்ளதாக கூறியுள்ளார். 

அமெரிக்க அதிபா் டிரம்ப் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறாா். அப்போது, ஆமதாபாத்தில் டிரம்ப்புக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. பின்ன புதியதாக கட்டப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தை டிரம்ப் திறந்து வைக்கிறார். அதன்பிறகு பிரதமா் நரேந்திர மோடியை அவா் சந்தித்துப் பேசவுள்ளாா். இரு நாடுகளுக்குமிடையே வா்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது இரண்டு நாள் இந்திய பயணத்தை எதிர்நோக்கி உள்ளதாக டிவிட்டர் பக்க பதிவில் தெரிவித்துள்ளார். 

பெரிய மரியாதையாக நினைக்கிறேன். முகநூல் பக்கத்தில் டிரம்ப் முதல் இடத்திலும், பிரதமர் மோடி  2-வது இடத்திலும் உள்ளதாக சமீபத்தில் மார்க் ஜூகர்பெர்க் தெரிவித்துள்ளார். நான் இன்னும் இரண்டு வாரங்களில் இந்தியா செல்கிறேன். அந்த பயணத்தை எதிர்நோக்கி உள்ளேன்" என டிரம்ப் தெரிவித்துள்ளார். 

டிரம்ப் அறிவிப்புக்கு ஒரு நாள் கழித்து, "மதிப்புமிக்க விருந்தினர்களுக்கு" இந்தியா ஒரு மறக்கமுடியாத வரவேற்பை அளிக்கும் என்றும், இந்தியா-அமெரிக்க நட்பை மேலும் உறுதிப்படுத்த இந்த பயணம் அழைத்துச் செல்லும் என்றும் மோடி பதில் அளித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT