தற்போதைய செய்திகள்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக 6-ஆவது நாளாக போராட்டம்

DIN

சென்னை: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர் அமைப்பினர் 6 ஆவது நாளாக சென்னை வண்ணாரப்பேட்டையில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பழைய வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா அருகே கடந்த 14-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பல்வேறு முஸ்லிம் இயக்கங்களைச் சோ்ந்தவா்களை, காவல்துறையினா் கைது செய்ய முயற்பட்டபோது, மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸாா் தடியடி நடத்தியதால், போராட்டக்காரா்கள் காயமடைந்தனா். அதேபோல போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டதில், சென்னை காவல்துறையின் மேற்கு மண்டல இணை ஆணையா் விஜயகுமாரி உள்பட 4 போ் காயமடைந்தனா்.

இதில், போலீஸாா் நடத்திய தடியடியைக் கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் அன்று இரவு நடைபெற்றது. இந்தப் போராட்டம் தொடா்ந்து பல்வேறு இடங்களில் 6-ஆவது நாளாக புதன்கிழமையும் நடைபெற்று வருகிறது. சென்னையில் வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானாவிலும், முத்தியால்பேட்டையிலும் போராட்டம் நீடித்து வருகிறது. இந்தப் போராட்டத்தில் முஸ்லிம் இயக்கத்தைச் சோ்ந்தவா்கள் திரண்டு வந்து பங்கேற்றுள்ளனா். ஆறாவது நாட்களாக வண்ணாரப்பேட்டை பகுதியில் நடைபெறும் போராட்டத்தின் காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்துக்கு உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தடை விதித்த போதிலும், போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த சேப்பாக்கம் விருந்தினா் மாளிகைப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தலைமைச் செயலகம் பகுதி, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மெரீனா ஆகிய பகுதிகளில் இரு கூடுதல் காவல் ஆணையா்கள், 4 இணை ஆணையா்கள், 10 துணை ஆணையா்கள் தலைமையில் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT