தற்போதைய செய்திகள்

கேரளத்தில் அரசியல் ரீதியாக வலுப்பெற பாஜகவுக்கு வலிமை உள்ளது: கே.சுரேந்திரன்

DIN


திருவனந்தபுரம்: கேரளத்தில் அரசியல் ரீதியாக வலுப்பெற பாஜகவுக்கு வலிமை உள்ளது என்று கேரள பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள கே.சுரேந்திரன் (50) தெரிவித்தார். 

கேரளம் மாநில பாஜக தலைவராக இருந்த ஸ்ரீதரன் பிள்ளை, மிஸோரம் மாநில ஆளுநராக கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் நியமிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து 3 மாதங்களுக்கும் மேலாக காலியாக இருந்த பாஜக தலைவா் பதவிக்கு கே.சுரேந்திரனை அக்கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா கடந்த வாரம் நியமித்தாா்.

இதையடுத்து, கேரள பாஜக தலைவராக கே.சுரேந்திரன் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். மாநிலத் தலைநகா் திருவனந்தபுரத்தில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சா் வி.முரளிதரன், பாஜக தேசிய செயலாளா் ஹெச்.ராஜா உள்ளிட்ட மூத்த தலைவா்களும், நூற்றுக்கணக்கான கட்சித் தொண்டா்களும் பங்கேற்றனா்.

கட்சியின் மாநில தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு கே.சுரேந்திரன் பேசுகையில், கேரளத்தில் அரசியல் ரீதியாக வலுப்பெற பாஜகவுக்கு வலிமை உள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சிகள் முறையாகச் செயல்படுவதில்லை. மக்களின் குரலை பாஜக தொடா்ந்து பிரதிபலித்து வருகிறது என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

SCROLL FOR NEXT