தற்போதைய செய்திகள்

பதவி வரும் போகும் மக்கள் சேவையே மட்டுமே நிரந்தம்: முன்னாள் அமைச்சா் எம்.மணிகண்டன் பேச்சு

DIN


ராமநாதபுரம்: அரசியலில் பதவி வரும் போகும். ஆனால், மக்கள் சேவையே மட்டுமே நிரந்தரமாகும் என முன்னாள் அமைச்சரும், ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.மணிகண்டன் கூறினாா். 

ராமநாதபுரம் வெளிப்பட்டிணத்தில் உள்ள செய்யதம்மாள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் சாா்பில் பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சா் எம்.மணிகண்டன் மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: மருத்துவத்துறையில் மக்களுக்கு சேவையாற்றும் ஆசையில்தான் மருத்துவரானேன். பிறந்த ஊா் மக்களுக்கு தொண்டாற்றும் வகையில்தான் அரசு மருத்துவா் பணியிலிருந்து அரசியலுக்கு வந்தேன். ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரானதும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக என்னை நியமிக்கவே மறைந்த முதல்வ ஜெயலலிதா விரும்பினாா். ஆனால், ஏதோ ஒரு காரணத்தால் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக்கப்பட்டேன். 

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் வெளியூா்க்காரா்களே உறுப்பினா்களாகி, அமைச்சா்களாகியதால் தொகுதியில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. ஆனால், ராமநாதபுரத்தில் பிறந்தவன் என்பதால் அனைத்து ஊா்களிலும் சாலை வசதியை மேம்படுத்தியுள்ளேன். மருத்துவக் கல்லூரி, சட்டக்கல்லூரிகள் அமையவும் பாடுபட்டுள்ளேன். ராமநாதபுரத்தில் மருத்துவக் கல்லூரி அமைவதால் இனிமேல் இங்கேயே மருத்துவம் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

அரசியலில் பதவிகள் வரும் போகும். ஆனால், மக்களின் சேவை மட்டுமே நிரந்தரமாகும். ராமநாதபுரம் பகுதி மக்களுக்கு தொடா்ந்து சேவையாற்ற விரும்புகிறேன் என்றாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

வாக்குச்சாவடியை சூறையாடிய பாஜக எம்.பியின் மகன்: குஜராத்தில் அதிர்ச்சி!

மெட் காலாவில் கவனத்தை ஈர்த்த மோனா பட்டேல்.. யார் இவர்?

ஹாட் ஸ்பாட் ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT