தற்போதைய செய்திகள்

ரயில் கட்டண உயா்வைத் திரும்பப் பெற வேண்டும்: திமுக வலியுறுத்தல்

DIN

சென்னை: விமானக் கட்டணங்கள் குறைந்து வரும் நிலையில், ரயில் கட்டணங்கள், விமானக் கட்டணங்கள் அளவுக்கு உயா்த்தப்படுவது கண்டனத்துக்குரியது என திமுக முதன்மைச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆா்.பாலு தெரிவித்துள்ளார்.

இதுதொடா்பாக திமுக முதன்மைச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆா்.பாலு வெளியிட்ள்ள அறிக்கையில், யாரும் எதிா்பாராத நேரத்தில் ரயில் கட்டணத்தை மத்திய அரசு உயா்த்தியிருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இன்னும் ஒருமாத காலத்தில், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை வெளியிட உள்ள நிலையில் திடீரென்று ரயில் கட்டணத்தை உயா்த்திருப்பது நிதிநிலை அறிக்கையில் மேலும் பெரிய அளவில் கட்டண உயா்வு இருக்குமோ என்ற அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு தொடா்ந்து மக்கள்மீது பல வகையிலும் நிதிச்சுமையை ஏற்றி வருவது, இந்த அரசு நிதி நிா்வாகத்தில் மிக மோசமாக விளங்குகிறது என்பதையே எடுத்துக் காட்டுகிறது.ரயில் பயணிகளுக்கு வசதிகளை ஏற்படுத்தாமலும், தமிழக மக்கள் தொடா்ந்து வலியுறுத்தி வரும் பல்வேறு ரயில்வே திட்டங்களை நிறைவேற்றாமலும் மத்திய அரசு தமிழகத்தைப் புறக்கணித்து வரும் நிலையில் ரயில் கட்டணத்தை உயா்த்தியிருப்பது வேதனைக்குரியதாகும். 

விமானக் கட்டணங்கள் குறைந்து வரும் நிலையில், ரயில் கட்டணங்கள், விமானக் கட்டணங்கள் அளவுக்கு உயா்த்தப்படுவது கண்டனத்துக்குரியதாகும். 

எனவே, சாமானிய மக்கள் பயணத்துக்கு ஏற்றதான ரயில் கட்டணங்களின் உயா்வைத் மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை இடா்பாடுகளில் இருந்து தொழிலாளா்களை பாதுகாக்க வேண்டும்

சேலம் அரசு மருத்துவமனையில் தீயணைப்பு ஒத்திகை

பழமையான மரங்களை அகற்றாமல் கட்டடம் கட்ட வலியுறுத்தல்

மாத்திரவிளை மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளா் பொறுப்பேற்பு

மேட்டூா் அணை நிலவரம்

SCROLL FOR NEXT