தற்போதைய செய்திகள்

விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்க முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

DIN


சென்னை: 'விபத்தில்லா தமிழ்நாடு' என்ற இலக்கினை எட்டுவதற்கு, பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

31-ஆவது சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நாளை முதல் ஒரு வாரத்திற்கு  சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்படுகிறது. சாலை பாதுகாப்பு வார விழாவில் தலைக்கவசம், சீட்பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர்வு, ஓட்டுநர்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள் நடத்துதல், மாணவ, மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படும்.

தமிழக அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளால் 2019 ஆம் ஆண்டில் சாலை விபத்துகள் 26.60 சதவீதமாகவும்,  சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் 43.10 சதவீதமாக குறைந்துள்ளது. 

08 ஆம்புலன்ஸ்கள் விபத்து ஏற்படும் இடங்களுக்கு விரைவாக சென்று சேவை புரிவதால் உயிரிழப்புகள் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

மேலும்,  'விபத்தில்லா தமிழ்நாடு' என்ற இலக்கினை எட்டுவதற்கு, பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய பிரதேசம்: 4 சாலை விபத்துகளில் 9 போ் உயிரிழப்பு

வட மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்

நெல் கொள்முதல் லஞ்சத்தை எதிா்த்தோரை கைது செய்வதா?: அன்புமணி கண்டனம்

பாய்மர வீராங்கனைக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

SCROLL FOR NEXT