மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை தடை விதிக்கப்பட்டதால் மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது. 
தற்போதைய செய்திகள்

கரோனா: 10 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையினர் தடைவிதித்துள்ளதை அடுத்து 10 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை, துறைமுகங்களிலேயே படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது.

DIN


ராமேசுவரம்: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 5-ஆம் தேதி முழு ஊரடங்கு காரணமாக ராமேசுவரம்,பாம்பன்,மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீனவர்கள் சனிக்கிழமை மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையினர் தடைவிதித்துள்ளதை அடுத்து 10 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை, துறைமுகங்களிலேயே படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம்,மண்டபம் மற்றும் பாம்பன் துறைமுகங்களில் 1500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளது. 

இந்நிலையில், தமிழக அரசு கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ராமேசுவரம்,பாம்பன்,மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை மீன்பிடிக்க சென்று விட்டு ஞாயிற்றுகிழமை கரைக்கு திரும்புவது வழக்கம். ஆனால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமை மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை, அந்தந்த துறைமுகங்களில் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தான் சென்றபோது சொந்த நாட்டில் இருப்பதைப் போல் உணர்ந்தேன்! சாம் பித்ரோடா

யுரேனியம் நிறைந்த ஜார்க்கண்ட் அணு ஆயுத உற்பத்திக்கு பங்களிக்க முடியும்: முதல்வர்!

காந்தாரா சாப்டர் 1 - டிரைலர் அறிவிப்பு!

ஃபிஃபா தரவரிசை: ஸ்பெயின் முதலிடம்..! 28 மாதங்களுக்குப் பின் கீழிறங்கிய ஆர்ஜென்டீனா!

கிருஷ்ணகிரி அணையிலிருந்து நீர் திறப்பு! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

SCROLL FOR NEXT