தற்போதைய செய்திகள்

என்எல்சி தீ விபத்து: மேலும் ஒரு தொழிலாளி பலி

DIN


நெய்வேலி: என்எல்சி தீ விபத்தில் காயம் அடைந்த மேலும் ஒரு தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா நிலையத்தின் 2-ஆவது அனல்மின் நிலையத்தில் 1-ஆம் தேதி கொதிகலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒப்பந்தத்தொழிலாளர்கள் 6 பேர் நிகழிடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்த 17 பேர் மருத்துவமனயில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் துணை தலைமை பொறியாளர் க.சிவகுமார் இரு தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.  

இந்நிலையில், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விருத்தாசலம் வட்டம், தொப்புளிகுப்பம் கிராமம் கோபால் மகன் செல்வராஜ்(ஒப்பந்தத்தொழிலாளி) ஞாயிற்றுக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து என்எல்சி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

SCROLL FOR NEXT