முகப்பு
சேரும் சகதியுமாக காட்சியளிக்கும் ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்.
தற்போதைய செய்திகள்

ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் சேரும் சகதியால் பொதுமக்கள் வியாபாரிகள் அவதி

ஈரோடு பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் கடந்த 2 ஆம் தேதி முதல் ஈரோடு வ.உ.சி பூங்கா பகுதியில் மாற்றப்பட்டு  செயல்பட்டு வருகிறது.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:55 PM
சேரும் சகதியுமாக காட்சியளிக்கும் ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்.
பகிர்:

ஈரோடு: ஈரோடு பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் கடந்த 2 ஆம் தேதி முதல் ஈரோடு வ.உ.சி பூங்கா பகுதியில் மாற்றப்பட்டு  செயல்பட்டு வருகிறது.  

ரூ.1 கோடி மதிப்பில் 700 க்கும் மேற்பட்ட காய்கறிகடைகள் மற்றும் பழக்கடைகள் அமைக்கப்பட்டு  செயல்பட்டு வருகிறது.  இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை மொத்த வியாபாரமும், காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை சில்லறை வியாபாரம் நடைபெற்று வருகிறது.  

இந்நிலையில், ஈரோடு மாநகர் பகுதியில் புதன்கிழமை மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. சிறிது நேரத்தில் இடியுடன் கனமழை பெய்தது. இதனால் நகரின் முக்கிய பகுதியில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.  இதேபோல் வ.உ.சி பூங்காவில் செயல்பட்டு வரும் நேதாஜி மார்க்கெட்டிலும் மழைநீர் தேங்கி சேறும் சகதியாக உள்ளதால் வியாபாரிகள் மிகவும் சிரமப்பட்டனர். சரக்கு ஏற்றி வந்த சரக்கு வாகனங்கள் சில சகதியில் சிக்கியன. மார்கெட் முழுவதும்  சேரும் சகதியுமாக காட்சி அளிப்பதால் வியாழக்கிழமை காலை மார்க்கெட்டிற்கு காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு காய்கனிகளை வாங்கி சென்றனர்.  புதன்கிழமையை விட வியாழக்கிழமை மார்க்கெட்டில் மக்களின் கூட்டம் குறைவாகவே இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →