தற்போதைய செய்திகள்

பிரேசில் கரோனா பாதிப்பு  20 லட்சத்தை தாண்டியது 

பிரேசிலில் கரோனா நோய்த்தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது. அங்கு ஒரே மாதத்தில் இரட்டிப்பாகி உள்ளது. 

DIN


பிரேசிலில் கரோனா நோய்த்தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது. அங்கு ஒரே மாதத்தில் இரட்டிப்பாகி உள்ளது. 

பிரேசில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 43,829 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 2,014,738 ஆக உயர்ந்துள்ளது. அதே கால அளவில் 1,299 பேர் உயிரிழந்தனர். இதனால், ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 76,822 ஆக அதிகரித்துள்ளது. 

உலம் முழுவதும் 1,39,53,342 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 5,92,778 பேர் பலியாகியுள்ள நிலையில், பிரேசிலில் கரோனா நோய்த்தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 20,14,738 லட்சத்தை தாண்டியது. அங்கு ஒரே மாதத்தில் இரட்டிப்பாகி உள்ளது. அங்கு இதுவரை 76,822 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 13,66,775 பேர் குணமடைந்துள்ளனர், தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் 5,71,141 பேர்களில் 8,318 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நபோ​லியை வீ‌ழ்‌த்​தி​யது மா‌ன்​செஸ்​ட‌ர் சி‌ட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை

காயம் ஆறிவிடவில்லை!

காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெறத்தான் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது

இணைய வரன்களில் எச்சரிக்கை!

இயந்திரங்களால் ஆனது உலகு!

SCROLL FOR NEXT