முகப்பு
தற்போதைய செய்திகள்

பல்லடம்: இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் - 2 பேர் பலி

பல்லடத்தில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:57 PM
பகிர்:

பல்லடத்தில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில்  தாராபுரம் செல்லும் சாலையில் ராஜிவ் காந்தி நகர் பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் மதுரையை சேர்ந்த சதீஸ்குமார் மற்றும் தாராபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மணிக்குமார் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  

விபத்து குறித்து பல்லடம் காவலர்கள் வழக்கு பதிவிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →