முகப்பு
தற்போதைய செய்திகள்

சேலம் மாநகராட்சியில் வீடு வீடாகச் சோதனை

சேலம் மாநகராட்சியில் உள்ள 60  கோட்டங்களிலும்  நோய் தொற்று கண்டறிய 700 களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என மாநகராட்சி ஆணையர் சதீஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:59 PM
House to house inspection in Salem Corporation
பகிர்:

சேலம் மாநகராட்சியில் உள்ள 60 கோட்டங்களிலும் நோய் தொற்று கண்டறிய 700 களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று சோதனை மேற்கொண்டு வருவதில் இதுவரை 78 பேருக்கு கரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு,  சிகிச்சைக்கு அனுமதித்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் சதீஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகர பகுதியில் கரோனா தொற்று  அதிவேகமாக பரவி வருவதை தடுக்கவும், நோய்த்தொற்று உள்ளவர்களை கண்டறியவும் வீடு வீடாக சென்று விவரங்களை சேகரிக்கும் நடைமுறை கடந்த 2ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது.

இந்த பணியில் 700 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் சேலம் மாநகராட்சி 4 மண்டலங்களில்,  60 கோட்டங்களிலும் உள்ள  மொத்தம் 2 லட்சத்து 34 ஆயிரத்து 624 குடியிருப்புகளுக்கும் சென்று நேரடி ஆய்வு மேற்கொண்டு விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

சுமார் 10 லட்சம் மக்கள் சேலம் மாநகர பகுதியில் வசித்து வருகிறார்கள். இவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 90 ஆயிரத்து  620 வீடுகளில் உள்ள 7 லட்சத்து 63 ஆயிரத்து 487 நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டது.

இதில் 2330 பேருக்கு சளி, காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு கரோனா சோதனை மேற்கொண்டதில் 78 நபர்களுக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதித்த 78 பேரும் தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பணி தொடரும் என்ற வகையில் மாநகராட்சி ஆணையர் சதீஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →