தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 5081 கனஅடியாக அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

DIN

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 5081 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில் அணையின் நீர் மட்டம் சரிவிலிருந்து மீளும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேட்டூர் அணையின் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சரிந்து வரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம் சரிவிலிருந்து மீளும் வாய்ப்புகள் உள்ளது. கடந்த ஒரு வாரகாலமாக கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்து வருகிறது. கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தமிழகத்திற்கு வழங்கவேண்டிய காவிரி நீரில் ஒரு பகுதியை கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் கடந்த சில நாள்களாக மேட்டூர் அணைக்கு வந்துகொண்டிருக்கிறது. 

நாளுக்கு நாள் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வந்த நிலையில் வியாழக்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 5,081 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

நீர் திறப்பால் மளமளவென சரிந்து வந்த மேட்டூர் அணையின் நீர் மட்டம் நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக நீர் மட்ட சரிவு பாதியாக குறைந்துள்ளது. நீர் வரத்து மேலும் அதிகரித்தால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் சரிவிலிருந்து மீளும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வியாழக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர் மட்டம் 67.54 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 5,081 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. அணையின் நீர் இருப்பு 30.62 டி.எம்.சியாக உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகலில் மே 5-இல் கடையடைப்பு

ராமநாதபுரம் அருகே வட மாநில கா்ப்பிணிப் பெண் கொலை

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

SCROLL FOR NEXT