முகப்பு
தற்போதைய செய்திகள்

லூதியானாவில் சீன ராக்கிகள் புறக்கணிப்பு

லடாக்கின் கல்வான் பள்ளதாக்கில் சீனப் படையினரால் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து லூதியானாவில் உள்ள மக்கள் சீனப் பொருள்களை வாங்குவதையும், விற்பனை செய்வதையும் தவிர்த்து வருகின்றனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:59 PM
லூதியானாவில் சீன ராக்கிகள் புறக்கணிப்பு
பகிர்:

லடாக்கின் கல்வான் பள்ளதாக்கில் சீனப் படையினரால் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து நாட்டின் பல பகுதிகளில் சீனப் பொருள்கள் வாங்குவதை மக்கள் தவிர்த்து வருகின்றனர். தற்போது லூதியானாவில் உள்ள மக்கள் சீனப் பொருள்களை வாங்குவதையும், விற்பனை செய்வதையும் தவிர்த்து வருகின்றனர்.

இதைப்பற்றி லூதியானாவில் உள்ள வியாபாரியான பவன் குமார் கூறுகையில்,  ”இந்த ஆண்டு ரக்‌ஷபந்தன் விழா ஆகஸ்ட் 3 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மக்கள் வருட வருடம் ராக்கி வாங்குவது வழக்கம்.

அதைப் போல் இந்த ஆண்டு ராக்கி வாங்க கடைகளுக்கு வரும் மக்கள் இது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருளா என கேட்கிறார்கள். நான் ஆம் என கூறினால் கடையை விட்டு வெளியேறி விடுகிறார்கள்.

அதனால், தற்போது நான் இந்தியாவில் கைவினை கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட ராக்கிகளை மட்டுமே விற்கின்றேன். 

நம் நாட்டில் தயாரிக்கப்படும் ராக்கிகள் சீனப் பொருட்களை விட இது மிகத் தரமாகவும், அழகாகவும் இருக்கின்றன. இது நம் நாட்டின் பொருளாதரத்திற்கு உதவுவதாகவும், கைவினை கலைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் இருக்கும்” என பவன் குமார் தெரிவித்தார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.