முகப்பு
தற்போதைய செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் 25,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

கரோன தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு மாவட்டத்தில் 25,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்தார்.      

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:59 PM
ஈரோடு மாவட்டத்தில் 25,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
பகிர்:

கரோன தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு மாவட்டத்தில் 25,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்தார்.                          

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 539 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 396 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 135 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.                      

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 70,000 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 140  பகுதிகளில் 25,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 கரோனா பரிசோதனை இயந்திரங்கள் செயல்பாட்டில் உள்ளன. ஈரோடு அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை இயந்திரம் அவசர தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →