கட்டாய வசூல் செய்ததாக தனியார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம்
காரைக்குடியில் மகளிர் சுய உதவிக் குமுவினர் தனியார் நிதி நிறுவனத்திடம் பெற்ற கடனை கரோனா பொது முடக்க காலத்தில் கட்டாய வசூலில் ஈடுபட்டதால் அந்நிறுவன கிளை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தற்போதைய செய்திகள்கட்டாய வசூல் செய்ததாக தனியார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம்
காரைக்குடியில் மகளிர் சுய உதவிக் குமுவினர் தனியார் நிதி நிறுவனத்திடம் பெற்ற கடனை கரோனா பொது முடக்க காலத்தில் கட்டாய வசூலில் ஈடுபட்டதால் அந்நிறுவன கிளை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மகளிர் சுய உதவிக் குழுவினர் தனியார் நிதி நிறுவனத்திடம் பெற்ற கடனை கரோனா பொது முடக்க காலத்தில் கட்டாய வசூலில் ஈடுபட்டதால் காரைக்குடி நூறடிச்சாலையில் உள்ள அந்நிறுவன கிளை அலுவலகத்தை வெள்ளிக்கிழமை மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்ததும் காரைக்குடி வடக்குக் காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரனை நடத்தினர்.
சம்மந்தப்பட்ட நிதி நிறுவன கிளை மேலாளர், ஊழியர்கள் கரோனா பொது முடக்க காலத்தில் எவ்வித கடன் வசூலும் செய்யக் கூடாது. மகளிர் சுய உதவிக் குழுக்களின் கூட்டம் கூட்டவோ கடன் தொகை கட்டச் சொல்லி மிரட்டவோ கூடாது என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவையும், தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் அறிவிப்பை ஏற்று நடக்க வேண்டும் என்றும் மறு உத்தரவு வரும் வரை வசூலை நிறுத்த வேண்டும் என்றும் காவல் துறையினர் நிதி நிறுவனத்தினரிடம் தெரிவித்தனர்.
இதனை அவர்கள் ஏற்றுக் கொண்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். மகளிர் குழுக்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் இதில் கலந்து கொண்டனர்.