தற்போதைய செய்திகள்

கரோனா ஊரடங்கில் பணியாற்றிய கம்பம் காவலர்களுக்கு பாராட்டு

DIN

தேனி மாவட்டம் கரோனா ஊரடங்கில் பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.

தேனி மாவட்டம் கம்பத்தில் கரோனா ஊரடங்கில் பணியாற்றிய தெற்கு மற்றும் வடக்கு காவலர்களை பாராட்டி பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி வடக்கு காவல்  நிலையத்தில் திங்கட்கிழமை  நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு உத்தமபாளையம் காவல் துறை துணை சூப்பிரண்டு ந.சின்னக்கண்ணு தலைமை தாங்கினார். ஆய்வாளர் கே.சிலைமணி, சார்பு ஆய்வாளர்கள்  திவான்மைதீன், சுகுமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக ஏலக்காய் விவசாய ஐக்கிய மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அப்தாகீர் கலந்து கரோனா தொற்று நடவடிக்கையில் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், காவலர்களின் பணிகள் குறித்து பேசினார்.

இதனை தொடர்ந்து உத்தமபாளையம் காவல் துணை சூப்பிரண்டு சின்னகண்ணு, கரோனா ஊரடங்கு காலத்தில் பணியாற்றிய  காவலர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.

மேலும், கரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று திரும்பிய காவலர்களை வாழ்த்தினார்.

பின்னர் ஊரடங்கில் பணியாற்றிய காவலர்கள் மற்றும்  தன்னார்வலர்களை ஊக்குவிக்கும் விதமாக கம்பம்  விளையாட்டு கழகம் சார்பில் பாராட்டி, பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT