தற்போதைய செய்திகள்

ஒடிசா: தேர்வு முடிவு வெளிவருவதற்கு முன் மாணவன் தற்கொலை

DIN

ஒடிசா மாநிலத்தில் இன்று +2 தேர்வு முடிவுகள் வெளிவர இருந்த நிலையில் தேர்வு எழுதிய மாணவன் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஒடிசா மாநிலம் பட்குரா காவல் நிலையத்திற்கு உள்பட்ட கோடபல்லா கிராமத்தைச் சேர்ந்தவர் மிரஞ்சன் (வயது 15). இவர் அருகேவுள்ள நைந்திபூர் உயர்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்.  இன்று 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவர இருந்தது.

இந்நிலையில், நேற்று இரவு தூங்க சென்ற மாணவன் காலை வெகுநேரம் ஆகியும் வெளிய வரவில்லை. மிரஞ்சனின் தாயார் அவனை எழுப்ப சென்ற போது அவன் கதவை திறக்காத்தால் கதவை உடைத்து உள்ளே சென்று சென்றுள்ளனர்.

அங்கு அவன் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. உடனே அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்ததை உறுதி செய்தனர். 

பட்குரா காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மாவட்ட தலைமையக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மாணவனின் மரணம் குறித்து முழுமையான காரணம் தெரியாததால், காவல்துறையினர் இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT