தற்போதைய செய்திகள்

10 சதவீத இட ஒதுக்கீடு: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

DIN

சென்னை, ஜூலை 30: பொருளாதாரத்தில் பின்தங்கிய  வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் கிருபாகரன், அகில பாரத பிராமணர் சங்கத்தின் தலைவர் குளத்துமணி ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த உத்தரவின்படி ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கும் குறைவான வருமானம் கொண்டவர்கள் இந்த சலுகையைப் பெற தகுதியானவர்கள். இந்த இடஒதுக்கீட்டு சலுகையைப் பெற சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களிடம் இருந்து வருமானம் மற்றும் சொத்து சான்றிதழ்களைப் பெற்று சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சான்றிதழ்களை தற்போது வழங்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் கடந்த ஜூன் 4-ஆம் தேதியன்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். எந்த விதமான காரணங்களும் கூறாமல் இந்த சான்றிதழ்களை வழங்க வேண்டாம் என வருவாய் நிர்வாக ஆணையர் பிறப்பித்துள்ள சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தனர். 

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது அரசு தரப்பில் தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய  வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் வேலை வாய்ப்புகளுக்கு மட்டுமே இந்தச் சான்றிதழ்களை பயன்படுத்த முடியும் என்ற நிபந்தனையை நீக்க வேண்டும். பிற மாநிலங்களில் இந்த சான்றிதழ்களை பயன்படுத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை பெற தமிழகத்தில் வழங்கப்படும் சொத்து மற்றும் வருமானச் சான்றிதழ்களை பிற மாநிலங்களில் பயன்படுத்துவது தொடர்பாக அந்தந்த மாநிலங்கள் தான் முடிவு செய்ய  முடியும் எனக்கூறி இந்த வழக்குகளை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT