தற்போதைய செய்திகள்

சீமான் மீதான வழக்கை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி

DIN

சென்னை,ஜூலை 31: தமிழக முதல்வர் குறித்து அவதூறு கருத்துத் தெரிவித்த விவகாரத்தில் சீமான் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வர் குறித்து அவதூறு கருத்துத் தெரிவித்து, அவரது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியதாக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் சார்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்ற அவதூறு வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கின் ஆவணங்களைப் பெற நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி கடந்த பிப்ரவரி மாதம் நீதிமன்றத்தில் ஆஜரான சீமான் வழக்கு ஆவணங்களைப் பெற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், தன் மீது தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்கவும், வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 

இந்த வழக்கை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் காணொலி காட்சி மூலம் விசாரித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

நினைவிலோ வாமிகா!

SCROLL FOR NEXT