வண்ணாத்திக்குட்டை கரட்டில் மீது இருந்து பார்த்தால் நாமக்கல் மாவட்ட எல்லையிலுள்ள மலைகளின் முட்டின் மீது காணப்படும் அம்மன் திருவுருவம். 
தற்போதைய செய்திகள்

மலைகளின் முகட்டில் மேல் தெரியும் அம்மனின் திருவுருவம்: பக்தர்கள் படையெடுப்பு

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வண்ணாத்திக்குட்டை கரட்டில் இருந்து பார்த்தால், நாமக்கல் மாவட்ட எல்லையிலுள்ள மலைகளின்

பெரியார் மன்னன்

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வண்ணாத்திக்குட்டை கரட்டில் இருந்து பார்த்தால், நாமக்கல் மாவட்ட எல்லையிலுள்ள மலைகளின் முகட்டில் மேல் அம்மன் துயில் கொண்டிருப்பதைப் போல திருவுருவம் காட்சியளிக்கிறது. இதுகுறித்து தகவலறிந்த ஏராளமான பக்தர்கள் படையெடுத்து வருவதால், வண்ணாத்திக்குட்டை கரடு ‘வியூ பாயிண்ட்’ ஆக மாறி வருகிறது.

சேலத்தில் இருந்து பனமரத்துப்பட்டி செல்லும் வழியில் மலைக்குன்றுகளுக்கு இடையே ஓரிடத்தில் நின்று பார்த்தால் மான் நிற்பதைப்போல காட்சியளிக்கும். இந்த அரிய காட்சியை இன்றளவும் அவ்வழியாக செல்வோர் கண்டு ரசித்து செல்கின்றனர். இதனால் இந்த கரடு பொய்மான் கரடு என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது.

இந்த வரிசையில், சேலம் மாவட்டம்  வாழப்பாடி அடுத்த மேற்கு ராஜாபாளையம் ஊராட்சி வண்ணாத்திக்குட்டை கரடும் இடம் பிடித்து, வியூ பாயிண்டாக மாறியுள்ளது. வாழப்பாடி-திம்மநாயக்கன்பட்டி சாலையோரத்தில் அமைந்துள்ள வண்ணாத்திக்குட்டை கரட்டில் உச்சியில் காணப்படும் உருவங்களற்ற பழமையான கூரிய கற்களை முருகக் கடவுளாக கருதி இப்பகுதி மக்கள் வணங்கி வருகின்றனர். இதுமட்டுமின்றி, இந்த கரட்டிலுள்ள பழமையான மாயவன் கற்துாணில், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் திருக்கோடி ஏற்றியும் வழிபட்டு வருகின்றனர்.

அம்மன் திருவுருவத்தை காண சென்ற பொதுமக்கள்.

இந்த கரட்டில் மீது ஏறி நின்று பார்த்தால், பச்சைபசேலனெ ரம்மியமாக காணப்படும் நாமக்கல் மாவட்ட எல்லையிலுள்ள மலைகளின் மேல், அம்மன் துயில் கொண்டிருப்பதைப் போல திருவுருவம் காட்சியளிக்கிறது. 

இதுகுறித்து தகவலறிந்த ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் அம்மன் திருவுருவத்தை காண படையெடுத்து வருவதால், வண்ணாத்திக்குட்டை கரடு வியூ பாயிண்டாக மாறியுள்ளது.

இதுகுறித்து சோமம்பட்டி சிவா கூறியதாவது:

வண்ணாத்திக்குட்டை கிராமத்திலுள்ள கரட்டில் பழமையான முருகன் கோவிலும், பெருமாள் திருக்கோடி கற்துாண்களும் காணப்படுகின்றன. இந்த கோவில்களுக்கு வரும் பக்தர்களும் பொதுமக்களும், கரட்டின் மீது ஏறி நின்று பார்க்கும் போது, மலைகளின் முகட்டில் மேல் சாந்த முகத்தோடு அம்மன் துயில் கொண்டிருப்பதை போல திருவுருவும் காட்சியளிக்கிறது. இது குறித்து தகவல் வெளியானதால் அம்மன் திருவுருவுத்தை காண பொதுமக்களும், பக்தர்களும் வந்து செல்கின்றனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT