தற்போதைய செய்திகள்

புதுச்சேரியில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று

புதுச்சேரியில் புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது. 

DIN

புதுச்சேரி: புதுச்சேரியில் புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது. 

இது குறித்து புதுவை சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

புதுச்சேரியில்  இன்று மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது... இதன்படி புதுவை மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது. இப்போது 84 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். புதுச்சேரி அரசு மருத்துவமனையில் இதய பிரச்சினைகள் உள்ளிட்டவைகளால் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விழுப்புரத்தை சேர்ந்த 82 வயது முதியவர் உயிரிழந்தார்.

அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்தமுறை ஏற்பட்ட தவறுகள் இல்லாமல் அவரது உடலை அரசே அடக்கம் செய்ய முடிவு செய்துள்ளது என்றார் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்னலகுடியில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் தீவிரம்

ராஜஸ்தான் மண்பாண்டங்களை வாங்க மக்கள் ஆா்வம்!

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கடலில் மூழ்கி உயிரிழந்த மூவா் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வா் அறிவிப்பு

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

SCROLL FOR NEXT