தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே குடிபோதையில் மாமியாரை கொலைசெய்த மருமகன் கைது செய்யப்பட்டார்.
பேராவூரணி அருகே உள்ள கூப்புளிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் மீனாம்பாள் (70) இவரது கணவர் இறந்துவிட்டார், இவருக்கு நான்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவரது கடைசி மகள் விமலா என்பவரை பட்டுக்கோட்டை அருகே உள்ள இடையாத்தியை சேர்ந்த துரைராஜ் (35)என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
பேராவூரணியில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வந்த துரைராஜ் கடந்த ஒருவாரமாக மாமியார் வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். குடிப்பழக்கம் உள்ள துரைராஜ், செவ்வாய்க்கிழமை இரவு குடி போதையுடன் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரை மாமியார் கண்டித்துள்ளார், இதனால் ஆத்திரமடைந்த துரைராஜ் அரிவாளால் மீனாம்பாளை பல்வேறு இடங்களில் வெட்டியதில் பலத்த காயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து பேராவூரணி காவல்துறை வழக்குப் பதிவு செய்து துரைராஜை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.