மருத்துவச் செலவுக்குச் சேமித்த பணத்தில் 1000 முகக் கவசங்களை ஆட்சியரிடம் வழங்கிய பார்வையற்றோர் பள்ளிச் சிறுவன்
மருத்துவ செலவிற்காக வைத்திருந்த தொகையை பார்வையற்ற சிறுவன் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் முகககவசங்கள் வாங்கி மாவட்ட ஆட்சியரிடம்
பொன்னமராவதி: பொன்னமராவதியை சார்ந்த கண் பார்வையற்றோர் பள்ளியில் பயிலும் பார்வைற்ற சிறுவன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் தங்களது உண்டியல் சேமிப்பு தொகையின் மூலம் 1000 முகக் கவசங்கள் வாங்கி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொன்னமராவதியை சார்ந்தவர் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் பி.பாஸ்கர். இவரது மூத்த மகன் பா.தர்ஷன்(10) சென்னை லிட்டில் பிளவர் கண் பார்வையற்றோர் பள்ளியில் படித்து வருகிறார். தர்ஷன் தனது மருத்துவ மற்றும் கல்வி செலவுகளுக்காக உண்டியலில் ரூ.5000 சேமித்து வைத்துள்ளார். இவர் இத்தொகையுடன் சகோதரர் பா.பிரணவ் (9) உண்டியலில் சேர்த்து வைத்திருந்த சேமிப்பு தொகை ரூ. 2000 என மொத்தம் ரூ.7 ஆயிரத்துக்கு கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 1000 முகக் கவசங்கள் வாங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரியிடம் வழங்கியுள்ளார்.
மருத்துவ செலவிற்காக வைத்திருந்த தொகையை பார்வையற்ற சிறுவன் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் முகக் கவசங்கள் வாங்கி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தர்ஷனின் தாயார் ரேவதி பொது முடக்க காலத்தில் தொடர்ந்து 51 நாள்கள் ஆதரவற்ற ஏழை மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கியுள்ளார்.