முகப்பு
தற்போதைய செய்திகள்

குமரி முக்கடல் சங்கமம் பகுதியில் கடல் சீற்றம்

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் வியாழக்கிழமை ஏற்பட்ட சூறைக்காற்று காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:48 PM
பகிர்:

கன்னியாகுமரி: கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் வியாழக்கிழமை ஏற்பட்ட சூறைக்காற்று காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாள்களாக பலத்த சூறைக்காற்று வீசிவருகிறது. இதனால் வாழை விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 

இங்குள்ள முக்கடல் சங்கமம் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை தொடங்கி கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. அலைகள் 15 அடி உயரத்துக்கு ஆக்ரோஷமாக எழுந்தன. 

அலைகள் வேகத்துடன் கரைப்பகுதியை வந்தடைவதால் இங்கு நடைபெற்று வரும் படித்துறை அமைத்தல், கடற்கரை சீரமைப்பு உள்ளிட்ட சுற்றுலாப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →