தற்போதைய செய்திகள்

திராட்சை விலை வீழ்ச்சி : விவசாயிகள் கவலை

தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கில் கருப்பு பன்னீர் திராட்சை விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

DIN

தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கில் கருப்பு பன்னீர் திராட்சை விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் 5,000 ஏக்கர் பரப்பளவில் கருப்பு பன்னீர் திராட்சை விவசாயம்  நடைபெறுகிறது. இங்கு ஆண்டு முழுவதும் அனைத்து மாதங்களிலும் திராட்சைப் பழம் அறுவடை நடைபெறும்.

வழக்கமாக மகாராஷ்டிரம், கர்நாடகம் மாநிலங்களிலிருந்து விதையில்லா திராட்சை வரத்து இல்லாத ஜூன் முதல் அக்டோபர் வரை, கம்பம் பள்ளத்தாக்கு கருப்பு திராட்சை மட்டுமே சந்தைக்கு விற்னைக்கு வரும். அந்த சீசனில், விவசாயிகளிடமிருந்து பன்னீர் திராட்சை கிலோ ரூ.70 முதல் ரூ.110 வரை கொள்முதல் செய்யப்படும்.

இந்த நிலையில், தற்போது கம்பம் பள்ளத்தாக்கில் விவசாயிகளிடமிருந்து கருப்பு பன்னீர் திராட்சை கிலோ ரூ.30 முதல் ரூ.50 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. 

திராட்சை உற்பத்தி குறைவாக இருந்தாலும், கரோனா தீநுண்மி தொற்று தடுப்பு நடவடிக்கையாக சென்னை, மதுரை போன்ற பெருநகரங்களில் பல்வேறு இடங்களில் சந்தைகள் மூடப்பட்டுள்ளதால், விற்பனை வாய்ப்பு குறைந்து கொள்முதல் விலை சரிந்திருப்பதாக வியாபாரிகள் கூறினர்.

தென்மேற்கு பருவமழை காலத்தில் திராட்சை விவசாயத்தில் உற்பத்தி செலவு அதிகரிக்கும் நிலையில், விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் உலகளவில் 3ஆம் இடத்தில் இந்தியா: ஜெ.பி.நட்டா

மெல்ல விடைகொடு மனமே.. அரசு இல்லத்தை 8 மாதங்களுக்கு பிறகு காலி செய்தாா் டி.ஒய்.சந்திரசூட்!

போக்ஸோவில் ஆசிரியா் கைது

வழிப்பறி: 3 போ் கைது

நாய்க்குட்டிகளோடு பயணிகள் விளையாடும் புதிய முன்னெடுப்பு: ஹைதரபாத் விமான நிலையத்தில் அறிமுகம்

SCROLL FOR NEXT