தற்போதைய செய்திகள்

ராகுல் காந்தி பிறந்த நாள் விழா: கோவை கட்சி அலுவலகத்தில் மரம் நடுவிழா

கோவையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அக்கட்சியின் அலுவலகத்தில் மரம் நடுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

DIN


கோவையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அக்கட்சியின் அலுவலகத்தில் மரம் நடுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

ஜூன் 19 -ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் கட்சி நிர்வாகிகளால் இனிப்புகள் வழங்கி கொண்டாடபட்டு வரும் நிலையில், வெள்ளிக்கிழமை காலை காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான, ரயில் நிலையம் அருகே உள்ள காமராஜ் பவனில் மரம் நட்டு கொண்டாடபட்டது. இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தியின் பிறந்த நாளை விவசாயிகள் பாதுகாப்பு தினமாக கடைபிடிக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றனர்.

முன்னதாக கரோனா தொற்று தீவிரம் மற்றும் இந்திய எல்லையில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் ஆகிய பிரச்னைகளால் தன்னுடைய 50-வது பிறந்த நாளை காங்கிரஸ் தொண்டர்கள் யாரும் கொண்டாட வேண்டாம் என்று ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் கட்சி நிர்வாகிகள் பிறந்தநாளை மிகவும் பயனுள்ள முறையில் தங்களின் மன அமைதிக்காக மரம் நட்டு மகிழ்ந்தனர்  என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிகழ்ச்சியானது கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மயுரா ஜெயக்குமார் தலைமையில் மரம் நடுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கபட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT