அறந்தாங்கி அருகே கல்லணை கால்வாயில் ஏற்பட்டுள்ள உடைப்பு அடைப்பை சரி செய்ய விவசாயிகள் முயற்சி கொண்டுள்ளனர்.
மேட்டுரில் இருந்து கடந்த 12-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரி நீரை திறந்துவிட்டார். கல்லணையில் இருந்து 16 -ஆம் தேதி திறந்து விடப்பட்ட காவிரி நீர் சனிக்கிழமை அறந்தாங்கி கடைமடை பகுதியான மேற்பனைக் காட்டிற்கு வந்தது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் வேம்பங்குடி அருகே பெரிய உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள வயல் வெளியில் காவிரி நீர் வீணாக வெளியேறி வருகிறது. அடைப்பை சரி செய்ய ஜே.சி.பி. உதவியுடன் சவுக்கு கம்புகளை குறுக்கே கட்டி மணல் வைத்து அடைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரைகளை பலப்படுத்தாததே உடைப்புக்கு காரணம் என்றும் இது குறித்து அதிகாரிகள் அலட்சியமாக இருந்தாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் இதே போன்ற சம்பவம் காரணமாக 3000 கன அடி நீர் குறைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.