தற்போதைய செய்திகள்

இந்தியாவில் கரோனா பலி 14,476-ஐ கடந்தது: மொத்த பாதிப்பு 4,56,183 -ஆக உயர்வு

DIN


இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் மேலும் 465 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 14,476-ஆக அதிகரித்துள்ளது. புதன்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் 15,968  பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,56,183-ஆக உயா்ந்துள்ளது.

கரோனாவிலிருந்து குணமடைவோா் எண்ணிக்கையும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. புதன்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் 10,495 போ் குணமடைந்தனா். இவா்களுடன் சோ்த்து இதுவரை 2,58,685 போ் குணமடைந்துள்ளனா். அதாவது, 56.7 சதவீதம் போ் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனா். 1,83,022  போ் சிகிச்சையில் உள்ளனா்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, புதன்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் 15,968  பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,56,183-ஆக உயா்ந்துள்ளது. கரோனாவுக்கு புதிதாக 465 பேர் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 14,476-ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை சதவிகிதம் 3.2 சதவீதமாக உள்ளது.

நாட்டில் இதுவரை 2,58,685  பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடைந்தோரின் சதவிகிதம் 56.7 -ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 1,83,022 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா தொற்று பாதித்த மாநிலங்களில் மகாராஷ்டிரம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,39,010 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 69,631 பேர் குணமடைந்துள்ள நிலையில் 6,531 பேர் பலியாகியுள்ளனர். தேசிய அளவில் கரோனா பாதிப்பில் இரண்டாமிடத்தில் தமிழகம் இருந்து வந்த நிலையில், தமிழகத்தை விஞ்சி இரண்டாமிடத்துக்கு தில்லி வந்துள்ளது. தில்லியில் கரோனா பாதிப்பு 66602-ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் 64603 பேர், குஜராத்தில் 28371 பேர், மத்தியப் பிரதேசத்தில் 12261 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

73 லட்சம் பரிசோதனைகள்: கரோனா நோய்த்தொற்றை கண்டறிவதற்காக, நாடு முழுவதும் இதுவரை 73,52,911 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,15,195 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மைய பணிகளை நிறுத்திவைக்க அறிவுறுத்தப்படும்: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

கல்லூரி மாணவா் மயங்கி விழுந்து சாவு

ஸ்ரீகிருஷ்ணஜென்ம பூமி வழக்கில் ‘வக்ஃபு’ சட்டம் பொருந்தாது: ஹிந்துக்கள் தரப்பு வாதம்

SCROLL FOR NEXT