கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் கரோனா தொற்று: ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் மரணம்

கரோனா தொற்று காரணமாக சிதம்பரத்தில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் மரணமடைந்தார்.

DIN

கரோனா தொற்று காரணமாக சிதம்பரத்தில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் மரணமடைந்தார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சி.தண்டீஸ்வரர்நல்லூர் ஊராட்சி நடேசன் நகரை சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க முதியவர். இவர் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர். இவருக்கு கடந்த 21ஆம் தேதி தீவிர காய்ச்சல், இருமல் ஏற்பட்டு சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

அப்போது அங்கு மருத்துவர்கள் அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து கரோனா பாதிப்பு முடிவு வரும் வரை மருத்துவமனையில் சிகிச்சை இருக்கும்படி சிகிச்சைக்கு கூறியுள்ளனர். இந்நிலையில் புதன்கிழமை இரவு திடீரென மூச்சுத்திணறல், அதிக இருமல் ஏற்பட்டது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார். 

மேலும் அவருக்கு எடுத்த கரோனா தொற்று பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரது உடலை அரசு விதிமுறைப்படி சிதம்பரம் ஓமக்குளம் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT