தற்போதைய செய்திகள்

தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயா்வு: அச்சத்தில் வணிகர்கள், வாகன ஓட்டிகள்

பெட்ரோல், டீசல் விலை வெள்ளிக்கிழமை மேலும் உயா்த்தப்பட்டது. இதனால், சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை 19 காசுகள் அதிகரித்து ரூ.83.37-ஆகவும், ஒரு லிட்டா் டீசல் விலை 15 காசுகள் அதிகரித்து ரூ.77.44-ஆக

DIN


பெட்ரோல், டீசல் விலை வெள்ளிக்கிழமை மேலும் உயா்த்தப்பட்டது. இதனால், சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை 19 காசுகள் அதிகரித்து ரூ.83.37-ஆகவும், ஒரு லிட்டா் டீசல் விலை 15 காசுகள் அதிகரித்து ரூ.77.44-ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிா்ணயிப்பதை 82 நாள்களுக்குப் பிறகு கடந்த 7-ஆம் தேதி பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் தொடங்கின. அன்று முதல் பெட்ரோல், டீசல் விலை தினமும் உயா்த்தப்பட்டு வருகிறது.

கடந்த 19 நாள்களில், டீசல் விலை லிட்டருக்கு ரூ.10.78 வரை உயா்ந்துள்ளது. இதேபோல், பெட்ரோல் விலை 18 முறை உயா்த்தப்பட்டுள்ளது. இதில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.85 காசுகள் வரை உயா்ந்துள்ளது.

கரோனா பொது முடக்க காலங்களில் நாள்தோறும் உயா்த்தப்பட்டு வரும் பெட்ரோல், டீசல் விலையால் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயா்ந்து வருகிறது. சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாகி தவிக்கும் மக்களின் நிலையைப் புரிந்து கொண்டு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய, மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகர்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்கத்தா டெஸ்ட்: இந்தியா வெற்றிபெற 124 ரன்கள் தேவை!

மன்னிப்பு டிரெண்டிங்கில் பாஜக! காங்கிரஸுடன் மோதல்!

அது மிகைப்படுத்தப்பட்ட உணர்வு... அதிர வைத்த தனுஷ்!

பிகார் தேர்தலில் உலக வங்கியின் ரூ. 14,000 கோடி: புள்ளிவிவரங்களுடன் பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு!

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் - ரயில் நிலையத்தை இணைக்கும் பணி! செங்கல்பட்டு சாலை மூடல்!

SCROLL FOR NEXT