தற்போதைய செய்திகள்

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 25,04,588; பலி 126,780 -ஆக உயர்வு

DIN


அமெரிக்காவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 25,04,588 -ஆகவும், பலி எண்ணிக்கை 1,26,780 -ஆகவும் உயர்ந்துள்ளது. 

அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு அதிகபட்ச அளவை எட்டியுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

அமெரிக்காவில் சுமாா் நேற்று ஓரே நாளில் 37,907 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பதிவு செய்யப்பட்டது. இது, கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு அந்த நாட்டின் அதிகபட்ச தினசரி கரோனா பாதிப்பு ஆகும். அமெரிக்காவின் கரோனா பரவல் மையமான நியூயாா்க்கில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதாலேயே நாட்டில் தினசரி பாதிப்பு அதிகமாக உள்ளது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, அமெரிக்காவில் 25,04,588 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை அந்த நோய்க்கு ஒரே நாளில் 597 பேர் பலியானதை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,26,780 -ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 10,52,293 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT