இந்திய தொல்லியல் துறை, சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் இணைந்து சேலம் மாவட்டம், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சங்ககிரி மலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
மத்திய அரசு அறிவுறுத்தலையடுத்து சங்ககிரி மலையில் மலையின் தோற்றங்களை மறைக்காதவாறு பலன் தரும் மரங்களை இந்திய தொல்லியல்துறை, சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் இணைந்து ஆலமரம், அரச மரம், நாவல், இலுப்பை, நெட்டிலிங்கம், வில்வம், பெருநெல்லி உள்ளிட்ட வகைகளைச் சேர்ந்த 25 மரக்கன்றுகளை நடப்பட்டன.
தொல்லியல்துறை சங்ககிரி மலைகாப்பாளர் சோனு, சுரேஷ், பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனர் மரம்பழனிசாமி, நிர்வாகி சீனிவாசன், திருச்செங்கோடு நீதி தேடல் அமைப்பு நிர்வாகிகள் வினோத், மணி, மோகன், நம்ம திருச்செங்கோடு அமைப்பின் நிர்வாகி பிரதீப், கிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் தலைவர் எ.ஆனந்தகுமார், செயலர் ராகவன், நிர்வாகிகள் எம்.முரளி, எஸ்.கணேஷ், ஆர்.கார்த்திகேயன், பொறியாளர் வேல்முருகன், கிஷோர்பாபு, கந்தகிரி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.