முகப்பு
தற்போதைய செய்திகள்

சங்ககிரி சோமேஸ்வரர் கோயிலில் ஆனி திருமஞ்சன சிறப்பு பூஜைகள்

சேலம் மாவட்டம், சங்ககிரி அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் ஆனி திருமஞ்சன சிறப்பு பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:51 PM
பகிர்:

சேலம் மாவட்டம், சங்ககிரி அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் ஆனி திருமஞ்சன சிறப்பு பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. 

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி அருள்மிகு நடராஜர், சிவகாமியம்மாள் உற்ச மூர்த்தி சுவாமிகளுக்கு சந்தனம், திருமஞ்சனம், பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. 

கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கை பொது முடக்கத்தையொட்டி பக்தர்கள் கோயிலுக்குச் செல்லவில்லை. கோயில் அர்ச்சகர் மட்டும் ஆகமவிதிகள் படி பூஜைகள் செய்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →